வாகன போக்குவரத்து நெரிசல்

இன்று சனிக்கிழமை பிரான்சின் அனைத்து வெளிச்செல்லும் வீதிகளிலும் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மிக நீண்ட வரிசையில் வாகனங்கள் ஊர்ந்துகொண்டிருக்கின்றன.

வீதி கண்காணிப்பாளர்களான, Bison Futé இந்த தகவலை வெளியிட்டுள்ளது. கோலை விடுமுறையின் இரண்டாவது வார இறுதிநாட்கள் என்பதால் விடுமுறையை கழிக்க மகிழுந்து உள்ளிட்ட வாகனங்களில் தொடர்ச்சியாக மக்கள் பிரான்சை விட்டு வெளியேறி வருகின்றனர். குறிப்பாக A7 வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. Auvergne-Rhône-Alpes மிக மோசமான போக்குவரத்து நெரிசலை சந்தித்துள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததைத் தொடர்ந்து, இன்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, நாளை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் எனவும், காலை 6 மணியில் இருந்து 19 மணிவரை பயணம் மேற்கொள்ளுவதை தவிர்க்கலாம் எனவும் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

Sharing is caring!