வாகன விற்பனை வீழ்ச்சி

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகளையடுத்து, வாகன விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, கண்டி, குருநாகல், நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளில் இருந்து கிடைத்துள்ள தகவல்களுக்கு அமைய, வாகன விற்பனை சற்று குறைவடைந்துள்ளதாக சங்கத்தின் தலைவர் இந்திக சம்பத் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தினால், வாகனங்களுக்கு சலுகை வழங்கப்படலாம் என மக்கள் எதிர்ப்பார்த்துள்ளதால் வாகனங்களைக் கொள்வனவு செய்வதை மக்கள் தாமதிக்கலாம் எனவும் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Sharing is caring!