வாகா எல்லையில் வீரர்கள் இனிப்பு பரிமாறி மகிழ்ச்சி

வாகா:
இனிப்பு பரிமாறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர் வாகா எல்லையில் வீரர்கள்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள, அட்டாரி – வாகா எல்லை பகுதியில், தீபாவளியையொட்டி, எல்லைப் படை வீரர்களும், பாக்., ராணுவத்தினரும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் பரிமாறி, வாழ்த்து தெரிவித்தனர்.

ஒவ்வொரு ஆண்டும், குடியரசு தினம், சுதந்திர தினம், ரம்ஜான் மற்றும் தீபாவளியின் போது இரு நாட்டு வீரர்களும் இனிப்புகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். அந்த வகையில் கடந்த தீபாவளியின் போது இனிப்பு பரிமாறி கொண்டு மகிழ்ந்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!