வாக்கு இயந்திரம் மீது இப்ப… இப்ப… நம்பிக்கை இருக்கா? தமிழிசை கேள்வி

சென்னை:
இப்ப நம்பிக்கை இருக்கா? இருக்கா? என்று எதிர்கட்சிகளுக்கு கேள்வி எழுப்பி உள்ளார் பாஜ தலைவர் தமிழிசை. எதற்காக தெரியுங்களா?

தற்போது வாக்கு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை உள்ளதா என தமிழக பா.ஜ., தலைவர் தமிழிசை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

தேர்தல் முடிவுகள் மாநில பிரச்னைகளின் எதிராலியே. பா.ஜ., மோசமான தோல்வி அடையவில்லை. அனைத்து தொகுதிகளிலும் கடும் போட்டி கொடுத்துள்ளோம். பா.ஜ.,விற்கு எதிரான கூட்டணி வெற்றி பெறாது.

இழுபறி ஏற்பட்டுள்ள இடங்களில் பா.ஜ., வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. கூட்டணி வெற்றி பெறும் என்பதை தெலுங்கானா முடிவுகள் தோற்கடித்துள்ளது. நேற்று நடந்த கூட்டணி கூட்டம் எந்த விதத்திலும் வெற்றியை தராது என்பதை தெலுங்கானா நிரூபணம் செய்துள்ளது.

ம.பி.,யில் மாநில பிரச்னையில் பா.ஜ., தோல்வியடைந்துள்ளது. பா.ஜ.,வின் லோக்சபா தேர்தல் வெற்றியின் ஆரம்பமாக தான் இதனை எடுத்து கொள்ள முடியும். தற்போது, வாக்கு இயந்திரம் மீது எதிர்க்கட்சிகளும் நம்பிக்கை உள்ளதா? அவர்கள் வெற்றி பெற்றால் வாக்கு எந்திரம் மீது நபம்பிக்கை எனவும், நாங்கள் வெற்றி பெற்றால், இயந்திரம் கோளாறு எனவும் தவறான குற்றச்சாட்டை சொல்கின்றனர்.

வாக்கு இயந்திரத்தை பயன்படுத்தி வெற்றி பெற்றோம் என பா.ஜ.,வின் வெற்றியை கொச்சைபடுத்தியதற்காக எதிர்க்கட்சிகள் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு தமிழிசை கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!