“வாங்க… வாங்க… திறமையான இந்தியர்களே வாங்க…”

மும்பை:
வாங்க.. வாங்க… திறமையான இந்தியர்களே வாங்க… என்று அமெரிக்கா அழைக்கிறது.

திறமையான, தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் இந்தியர்களை,
அமெரிக்கா ஒருபோதும் வரவேற்க தவறியதில்லை என்றும் அமெரிக்காவிற்கான துணை தூதரக உயரதிகாரி எட்கார்ட் காகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் மும்பையில் தெரிவித்ததாவது:
ஹெச் 1 பி விசா நடைமுறையில், அதிபர் டிரம்ப் தொடர்ந்து மாறுதல்களை செய்துவருகிறார். அதேசமயம், இந்தியாவுடனான நல்லுறவை காப்பதிலும் டிரம்ப் உறுதியாக உள்ளார்.

திறமையான இந்தியர்களை வரவேற்க அமெரிக்கா எப்போதும் தயங்கியதில்லை. இதற்கு கடந்தாண்டு அமெரிக்காவிற்கு வந்த இந்தியர்களின் எண்ணிக்கையே ஆதாரம். அமெரிக்காவில், மேற்படிப்பு படிக்க இந்திய மாணவர்களை வரவேற்கிறோம்.

அதேபோல், இந்தியாவிலும், அமெரிக்க மாணவர்கள் படித்து வருகின்றனர். இதன்மூலம், இருநாடுகளுக்கிடையேயான நட்புறவு வலுப்பெறும் என்று நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!