“வாங்க… வாங்க… பிரிந்து சென்றவர்கள் எல்லோரும் வாங்க…”

சென்னை:
வாங்க… வாங்க… பிரிந்து சென்றவர் மீண்டும் வாங்க… என்று முதல்வர், துணை முதல்வர் அழைப்பு விடுத்துள்ளனர்.

அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சியில் இணைய வேண்டும் என முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் அழைப்பு விடுத்துள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

தவறான வழி நடத்தல்கள், மனகசப்புகள் காரணமாக பிரிந்து சென்றவர்கள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்ப வேண்டும். ஐகோர்ட் தீர்ப்பின் யதார்த்தத்தை புரிந்து கொண்டு மாற்றுப்பாதையில் சென்றவர்கள் மீண்டும் அதிமுகவில் இணைய வேண்டும்.

ஐகோர்ட் தீர்ப்பு அதிமுகவினருக்கும் தமிழக மக்களுக்கும் உற்சாகத்தை தந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!