வாஜ்பாய் உடல்நிலை கவலைக்கிடம்

முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக நேற்று டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை  தெரிவித்திருந்த நிலையில், தொடர்ந்து மோசமாகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சிறுநீரக கோளாறு காரணமாக கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் வாஜ்பாய். இந்நிலையில், நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது. பிரதமர் மோடி நேற்று அவரது உடல்நிலை குறித்து நேரில் சென்று நலம் விசாரித்த நிலையில், இன்று காலை துணை ஜனாதிபதி வெங்கய்ய நாயுடு நேரில் சென்று வாஜ்பாயை பார்த்தார்.

ஆனால், அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லையென்றும், தொடர்ந்து மோசமாகி வருவதாகவும் மருத்துவ வட்டாரங்களில் பேசப்படுகிறது. உயிர் காக்கும் கருவிகள் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை இன்று மேலும் ஒரு அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Sharing is caring!