வாட்ஸ் ஆப்பில் பணம் செலுத்தும் வசதி… விளக்கம் கேட்டு நோட்டீஸ்

புதுடில்லி:
வாட்ஸ் ஆப்பில் பணம் செலுத்தும் வசதி… மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியது கோர்ட் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

சமூக வலைதளமான, ‘வாட்ஸ் ஆப்’ மூலம் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் அரசு சாரா அமைப்பு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அதில், ‘வாட்ஸ் ஆப், ஒரு சர்வதேச நிறுவனம். இதில் பணம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் ஏதாவது குளறுபடி நடந்தால், யாரை தொடர்பு கொள்வது. இது தொடர்பாக, குறை தீர் அதிகாரியை அந்த நிறுவனம் நியமிக்க வேண்டும்’ என, கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசு மற்றும் வாட்ஸ் ஆப் நிறுவனத்திற்கு ‘நோட்டீஸ்’ அனுப்பி, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!