வாரணாசி தொகுதியில் பிரதமரை எதிர்த்து சத்ருகன் போட்டியா?

லக்னோ:
எதிர்த்து போட்டியிட முடிவா? பிரதமரை எதிர்த்து சத்ருகன் சின்ஹா போட்டியிட முடிவா? என்ற கேள்வி அரசியல் அரங்கில் எழுந்துள்ளது.

பா.ஜ., அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, அடுத்த லோக்சபா தேர்தலில் வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பா.ஜ.,வை சேர்ந்த மூத்த தலைவரும், நடிகருமான சத்ருகன் சின்ஹா கட்சியில் தனக்கு முக்கியத்துவம் கிடைக்காததால், பா.ஜ.,வையும், பிரதமர் நரேந்திர மோடியையும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் சமாஜ்வாதி கட்சி வட்டாரங்கள் கூறியதாவது: பா.ஜ., அதிருப்தி தலைவர் சத்ருகன் சின்ஹா, அடுத்தாண்டு நடக்கவுள்ள லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலம், வாரணாசி தொகுதியில், சமாஜ்வாதி கட்சி சார்பாக போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.

வாரணாசியில் சத்ருகன் சின்ஹா சார்ந்த, காயஸ்தா சமூகத்தினரின் ஆதரவு அவருக்கு கிடைக்கும். எனவே அவரை சமாஜ்வாதி சார்பில் போட்டியிட வைக்க பேச்சு நடக்கிறது. விரைவில் முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது.

கடந்த 2014ல், வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் நரேந்திர மோடி, அபார வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், இரண்டாம் இடம் பிடித்தார். வரும் லோக்சபா தேர்தலில் கெஜ்ரிவால் ஆதரவை பெறுவதற்கான பேச்சிலும், சமாஜ்வாதி தலைவர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!