விக்கிபீடியாவில் இடம் பிடித்த இம்ரான்கான் வளர்க்கும் நாய்கள்

இஸ்லாமாபாத்:
பிரதமர் ஆனார் இம்ரான்கான்… இதனால் அவர் வளர்க்கும் நாய்களும் விக்கிப்பீடியாவில் இடம் பிடித்துள்ளது.

பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகி உள்ள இம்ரான்கானின் நாய்களுக்காக விக்கிப்பீடியாவில் புதிய பக்கம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இதில், இம்ரான் கானின் 5 நாய்களின் பெயர்களும் பட்டியலிடப்பட்டுள்ளது.

இருப்பினும் அவை குறித்து மற்ற விபரங்கள் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இம்ரான் கானின் நாய்கள், செய்தியாளர்களின் கவனத்தை கவர்ந்ததால் அவைகளுக்கென தனி பக்கம் துவங்கப்பட்டதாக விக்கிப்பீடியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இம்ரான் கானின் நாய்கள் பற்றி பல்வேறு தகவல்களை விக்கிப்பீடியா குறிப்பிட்டுள்ளது. 2015 ம் ஆண்டு இம்ரானின் முதல் மனைவி ரேஹம், இம்ரானிடம் இருந்து விவகாரத்து பெற இந்த நாய்கள் தான் காரணம் என கூறப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை ரேஹம் மறுத்துள்ளார். 2018 ஏப்ரலில் இம்ரான் கானுக்கும் அவரது 3வது மனைவி முஷ்ரா மேனகாவிற்கும் இடையே பிரச்னை ஏற்படுவதற்கும் இந்த நாய்கள் தான் காரணம் என கூறப்படுகிறது. இம்ரான் கானின் பெரும்பாலான புகைப்படங்கள், பேட்டிகளின் போது அவரது செல்ல நாய்கள் இடம்பெற்றிருப்பதே செய்தியாளர்களின் கவனத்தை அவை கவர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!