விசாரணைக்கு வர வாய்ப்பில்லை… பீரங்கி ஊழல் விசாரணை?

புதுடில்லி:
விசாரணைக்கு வர வாய்ப்பில்லை… வாய்ப்பில்லை… என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 1986-ம் ஆண்டில் மத்தியில் காங். ஆட்சியின் போது சுவீடனைச் சேர்ந்த ஆயுத தயாரிப்பு நிறுவனம் ஒன்றிடமிருந்து இந்திய ராணுவத்திற்கு ரூ. 1,437 கோடியில் பீரங்கிகள் வாங்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தில் ரூ. 64 கோடி வரை லஞ்சம் கைமாறிய விவகாரத்தை 1990-ஆம் ஆண்டு சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரையும் 2005-ம் டில்லி உயர் நீதிமன்றம் விடுதலை செய்தது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. கடந்த பிப்ரவரியில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.

அப்போது அஜய் அகர்வால் என்பவர் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள கோரியிருந்தார். இந்த மனுக்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர் பானுமதி, இந்திரா பானர்ஜி ஆகியோர் முன் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படலாம் செய்திகள் வெளியாயின.
ஆனால் விசாரணைக்கு வர வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!