விசாரணையில் சோனியா பெயரை சொன்ன கிறிஸ்டியன்… அமலாக்கத்துறை கோர்ட்டில் தகவல்

புதுடில்லி:
தரகர் சொன்னார்… காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பெயரை சொன்னார் ஹெலிகாப்டர் ஊழல் தரகர் கிறிஸ்டியன் என்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளது அரசியல் பரபரப்பை கிளப்பி உள்ளது.

ஹெலிகாப்டர் ஊழல் தொடர்பாக இந்தியாவுக்கு நாடு கடத்தி கொண்டு வரப்பட்ட கிறிஸ்டியன் மைக்கேல், விசாரணையின் போது காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா பெயரை குறிப்பிட்டதாக கோர்ட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு எழுந்துள்ளது.

முந்தைய காங்கிரஸ் தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சியின் போது, வி.வி.ஐ.பி.,க்களுக்கு ஹெலிகாப்டர் வாங்க, ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த, ‘அகஸ்டா வெஸ்ட்லாண்ட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஒப்பந்தத்தைப் பெற அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கு, லஞ்சம் கொடுக்கப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக, பிரிட்டனைச் சேர்ந்த இடைத்தரகர், கிறிஸ்டியன் மைக்கேல் சமீபத்தில் துபாயில் கைது செய்யப்பட்டு இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். அவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில் கிறிஸ்டியன் மைக்கேலை 8 நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறி அமலாக்கத்துறை சார்பில் டில்லி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு மைக்கேலும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் கூறுகையில், விசாரணையின் போது, மைக்கேல் கிறிஸ்டியன் காங்கிரஸ் தலைவர் சோனியாவின் பெயரை குறிப்பிட்டுள்ளார். ஆனால், எந்த காரணத்திற்கு சொன்னார் என்பதை தற்போது கூற முடியாது.

விசாரணையின் போது, எச்ஏஎல் நிறுவனம் எப்படி ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்டு, அதற்கு பதிலாக டாடா நிறுவனம் சேர்க்கப்பட்டது என்பது குறித்தும் விளக்கினார். விசாரணையின் போது மைக்கேல் துன்புறுத்தப்படுவதாக, அவரது வக்கீல் பொய் சொல்வதை தடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!