விசாரிக்கப்பட வேண்டும்… நீதிபதிகள் அட்வைஸ்

புதுடில்லி:
விசாரிக்கப்பட வேண்டும்… விசாரிக்கப்பட வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். எதற்காக தெரியுங்களா?

ஏர்செல் மேக்சிஸ் வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அமலாக்கத்துறை அதிகாரி ராஜேஸ்வர் சிங்கின் வருமானத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் தொடர்பான வழக்குகள் மிகவும் முக்கியமானவை . இந்த வழக்குகளை விசாரிக்கும் அதிகாரி, எந்த நெருக்கடிக்கும் ஆளாகியிருக்கக் கூடாது. ராஜேஸ்வர் மீதான குற்றச்சாட்டுகள் சரி அல்லது தவறாக இருந்தாலும், அது குறித்து விசாரிக்கப்பட வேண்டும். ராஜேஸ்வர் சாதாரண அதிகாரி. சாதாரணமாக நற்சான்றிதழ் தர முடியாது. அனைவரும் சமமானவர்கள் தான் எனக்கூறியுள்ளது.

அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வக்கீல் ராஜேஸ்வர் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக விசாரிக்க தயாராக உள்ளதாக கூறினார். இதனையடுத்து, வழக்கு விசாரணை குறித்து மத்திய அரசே முடிவு செய்து கொள்ளலாம் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!