விஜய் – மணிரத்னம் கூட்டணி… கோலிவுட்டில் பரபரப்பு

சென்னை:
விஜய்யின் அடுத்த படத்தை மணிரத்னம் இயக்க உள்ளார் என்ற தகவல் கோலிவுட்டை அதகளம் செய்து வருகிறது. இது உண்மையா என்று சம்பந்தபட்டவர்களே தெரிவிக்க வேண்டும்.

முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த சர்கார் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் சாதனை செய்து விட்டது. வசூலை பொறுத்தவரை ரூ.250 கோடிகளை தாண்டிவிட்டது.

இந்நிலையில் அடுத்த படத்தை இயக்குனர் அட்லி இயக்கவுள்ளார். மெர்சல் கூட்டணியை தொடர்ந்து ரஹ்மான் விஜய்யுடன் அவர் மீண்டும் சேர்கிறார்.

இந்நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை (விஜய் 64) இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளார் என தகவல் சுற்றி வருகிறது. இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!