விஜய் மல்லையாவிற்கு 8 கோடி USD அபராதம் – லண்டன் கோர்ட்

இந்திய தொழிலதிபர் விஜய் மல்லையாவிற்கு லண்டன் நீதிமன்றம்  ரூ 9 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதித்துள்ளது.

ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் பணமோசடிப் புகாரில் சிக்கிய பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா அதை திருப்பி செலுத்தாமல் லண்டனுக்கு தப்பி சென்றார். மத்திய அரசு அவர் மீது தொடர்ந்த மோசடி வழக்கு  லண்டன் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன்னர் சிங்கப்பூரைச் சேர்ந்த ஒரு நிறுவனத்திடம் விஜய் மல்லையா, தனது கிங்பிஷர் விமான நிறுவனத்திற்கு 4 விமானங்கள் வாங்கியுள்ளார். ஆனால் அதற்கான பணத்தை மல்லையா கொடுக்கவில்லை. இதனால் கடுப்பான அந்நிறுவனம் மல்லையா மீது லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் 9 கோடி அமெரிக்க டாலர்களை மல்லையா வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Sharing is caring!