விஜய் மல்லையாவுக்காக மும்பையில் சிறை தயாராகிறது

மும்பை:
விஜய் மல்லையாவை நாடு கடத்த உத்தரவிடப்பட்டுள்ள நிலையில் அவருக்காக மும்பையில் உள்ள சிறை தயாராகி வருகிறது.

பல்வேறு வங்கிகளில், ரூ.9,000 கோடி கடன் வாங்கி, அதை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ததாக, பிரபல தொழில் அதிபரான, விஜய் மல்லையா, 62, மீது, வழக்குகள் தொடரப்பட்டன. 2016ல், பிரிட்டனின் லண்டன் நகருக்கு, மல்லையா தப்பியோடினார்.

நாடு கடத்தக் கோரி, பிரிட்டன் அரசுக்கு, மத்திய அரசு கோரிக்கை விடுத்தது. அதன்படி, மல்லையாவுக்கு எதிராக, லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், பிரிட்டன் அரசு வழக்கு தொடர்ந்தது. ஓராண்டாக நடந்து வந்த இந்த வழக்கில், நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்களின்படி இந்த வழக்கில், பதில் சொல்லியாக வேண்டிய நிலையில், மல்லையா உள்ளதால் அவரை நாடு கடத்த உத்தரவிடப்படுகிறது என நீதிபதி, எம்மா ஆர்பத்னாட் உத்தரவிட்டார்.

இந்நிலையில் விஜய்மல்லையா மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்படலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து மும்பை ஆர்தர் ரோடு சிறை நிர்வாகம் கூறியதாவது:

விஜய் மல்லையா மும்பை தாக்குதல் குற்றவாளி அஜ்மல்கசாப் அறையில் அடைக்கப்படுவார் உடல் நலக்குறைவு ஏற்பட்டால் மருத்துவ வசதிகளும் உண்டு. அருகே உள்ள அறையில் இளம் பெண் ஷீனா போரா கொலை குற்றவாளி பீட்டர் முகர்ஜியா .உள்ளார். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!