“விடமாட்டேன்… ரணிலை பிரதமராக விடமாட்டேன்”

கொழும்பு:
விடமாட்டேன்… மீண்டும் பிரதமராக விடமாட்டேன் என்று தெரிவித்துள்ளார் இலங்கை அதிபர் சிறிசேன.

இலங்கையில் ஏற்கனவே அரசியல் குழப்பம் நிலவுகிறது. இந்நிலையில், ”தனிப்பெரும் கட்சியாக இருந்தாலும், ரணில் விக்கிரமசிங்கேவை மீண்டும் பிரதமராக்க மாட்டேன்.

அவரை பார்லிமென்ட் அழைத்து வர வேண்டாம் என, அவரது கட்சியினருக்கு கூறியுள்ளேன்,” என, அதிபர், மைத்ரிபால சிறிசேன கூறியுள்ளார்.

இவரது இந்த பேச்சு மேலும் அரசியல் வட்டாரத்தில் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!