விடுவிக்கப்பட்டார்… இந்திரா நூயி சிஇஓ பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டார்

புதுடில்லி:
விடுவிக்கப்பட்டார்… விடுவிக்கப்பட்டார் இந்திரா நூயி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

பெப்சிகோ நிறுவன சிஇஓ பொறுப்பிலிருந்து இந்திய வம்சாவளியை சேர்ந்த இந்திரா நூயி(62) விடுவிக்கப்பட்டார். இருப்பினும் 2019ம் ஆண்டு வரை சேர்மன் பொறுப்பில் நூயி தொடர்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆண்டுகளாக பெப்சிகோ சிஇஓ.,வாக இந்திரா நூயி பொறுப்பு வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பெப்சிகோ புதிய சிஇஓ.,வாக, தற்போது சேர்மனாக உள்ள ரசமோன் லாகுவார்டா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் அக்., 3ம் தேதி சிஇஓ.,வாக பதவியேற்க உள்ளார்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!