விட்டாச்சு லீவ்… ஆடிப்பெருக்கு விழாவிற்கு தேங்க்ஸ்
காரைக்கால்:
லீவ்… லீவ்… ஆடிப்பெருக்கை முன்னிட்டு காரைக்கால் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு லீவ் விட்டுட்டாங்க.
ஆடி பெருக்கை முன்னிட்டு, காரைக்காலில் இன்று அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என, புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் குப்புசாமி தெரிவித்துள்ளதாவது:
இன்று நடைபெறும் ஆடிபெருக்கு விழாவையொட்டி, காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S