விதிமுறைகளின் படிதான் டெண்டர் விடப்பட்டது… முதல்வர் திட்டவட்டம்
விழுப்புரம்:
விதிமுறைகளின் படிதான் டெண்டர் விடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் முதல்வர் பழனிசாமி.
இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது: டெண்டர் விவகாரத்தி்ல் தி.மு.க.அளித்த புகாரில் உண்மையில்லை. விதிமுறைகளின் படிதான் டெண்டர் விடப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை. எனவே என் மீதான புகார் முழுவதும்பொய். பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர் பேட்டையில் அ.தி.மு.கவின் 47-ம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்டு முதல்வர் பழனிசாமி பேசியதாவது:
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் 26 ஆண்டுகள் ஆட்சி நடத்தினர். தி.மு.க எத்தனை வழக்கு தொடர்ந்தாலும் அதனை சந்திக்க தயார். எங்களுக்கும் வழக்கு தொடர தெரியும். டெண்டர் முறைகேடு வழக்கில் என்னை குற்றவாளி என நீதிமன்றம் சொல்லவில்லை. தி.மு.க என்பது கட்சி அல்ல. அதை கம்பெனியாக மாற்றிவிட்டனர். இவ்வாறு அவர் பேசினார்.
நன்றி– பத்மா மகன், திருச்சி