விநாயகர் ஊர்வலத்தில் பதற்றம்
செங்கோட்டையில் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீசியதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. செங்கோட்டையில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் மீண்டும் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கல்வீசித் தாக்கிக் கொண்டதில் பலர் காயம் அடைந்துள்ளனர்.
அசம்பாவிதங்களை தவிர்க்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். முன்னதாக செங்கோட்டை மற்றும் தென்காசியில் 144 தடை உத்தரவு போடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S