விபத்தை ஏற்படுத்தும் மையத் தடுப்பு… வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை

மாமல்லபுரம்:
அச்சம்… அச்சம்… என்று சாலையில் உள்ள மைய தடுப்பு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால் வாகன ஓட்டுனர்கள் அச்சத்தில் உள்ளனர்.

சென்னை – மாமல்லபுரம் இடையே, திருப்போரூர் வழியே, பழைய மாமல்லபுரம் சாலை உள்ளது. இதில், அடையாறு – சிறுசேரி ஆறுவழி சாலையாகவும், சிறுசேரி – பூஞ்சேரி சந்திப்பு பகுதி, நான்குவழிப் பாதையாகவும் உள்ளது.

சிறுசேரி – பூஞ்சேரி பகுதி சாலை, மூன்றாண்டுகளுக்கு முன் பெயர்ந்து, கடந்த ஆண்டு சீரமைக்கப்பட்டது. சீரமைப்பின் போது, பல இடங்களில், சாலை மட்டம் உயர்ந்தும், மையத் தடுப்பு உயரம், குறைந்தும் காணப்பட்டது.

ஒருபுறம் சாலை உயர்ந்தும், எதிர்புறச் சாலை தாழ்ந்தும் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு நடுவே அமைத்துள்ள மையத் தடுப்பை, முன்னால் செல்லும் வாகனத்தை முந்தும் வாகன ஓட்டுனர்கள் கவனிக்காமல், நிலைதடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.

விபத்தை தவிர்க்க, மையத் தடுப்புகளை சீராக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டுனர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!