விமானத்தில் சிகரெட் பிடித்த பயணி மீது வழக்கு

பனாஜி:
விமானத்தின் கழிவறையில் சிகரெட் பிடித்த பயணி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 25ம் தேதி குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து, கோவா மாநிலம் பனாஜி நோக்கி இண்டிகோ விமானம் சென்றது. விமானம் நடுவானில் பறந்துக்கொண்டிருந்தபோது கழிவறையில் இருந்து புகைப்பிடிக்கும் வாசமும் தொடர்ந்து புகையும் வெளிவந்தது.

சக பயணிகள் கொடுத்த புகாரை தொடர்ந்து விமானம் பனாஜியில் தரையிறங்கியதும் சிகரெட் பிடித்த பயணியை மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் வசம் ஒப்படைத்தனர். இந்நிலையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யபப்பட்டுள்ளது.

விமானத்தின் உட்பகுதியில் புகைபிடிப்பது சட்டப்படி குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!