விமானத்தில் சென்னைக்கு தங்கம் கடத்தி வந்த பயணி சிக்கினார்
சென்னை:
மலேசியாவிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வந்த பயணி சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பி உள்ளது.
மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலிருந்து சென்னை வந்த விமானத்தில் பயணித்த சயீப் அகமது,36 என்பவரிடம் நடந்த சோதனையில் 155 கிராம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.5 லட்சம் ஆகும்.
இதேபோல் துபாயிலிருந்து வந்தவரிடம், 300 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.9.47,100 ஆகும். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நன்றி– பத்மா மகன், திருச்சி
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S