விமானத்தில் ஜென்டில்மேனாக நடந்த மத்திய அமைச்சர்… குவியும் பாராட்டுக்கள்!
புதுடில்லி:
பாராட்டுக்கள் குவிகிறது மத்திய அமைச்சருக்கு… எதற்காக? என்ன விஷயம் தெரியுங்களா?
ஏர் ஆசியா நிறுவன விமானத்தில் பயணித்த விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, தான் கேட்ட சிற்றுண்டி, மறுக்கப்பட்ட போதிலும், அமைதியாக அதற்கான பணம் செலுத்தி பெற்று கொண்டதை பலரும் பாராட்டி வருகின்றனர்.
விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா டில்லியிலிருந்து ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சிக்கு ஏர் ஆசியா விமானத்தில் பயணம் செய்தார். அப்போது விமான ஊழியர்களிடம் குறிப்பிட்ட சிற்றுண்டியை தருமாறு கூறினார். ஆனால் விமான ஊழியர், அமைச்சர் தென் இந்திய உணவை தான் டிக்கெட் வாங்கும் போது, பதிவு செய்ததாகவும், தற்போது அதனை மாற்ற முடியாது எனக் கூறி உள்ளார்.
இதையடுத்து, தான் கேட்ட உணவிற்கான பணத்தை செலுத்தி அதனை பெற்று கொண்டார். இதை பார்த்த அருகில் இருந்த பயணிகள் டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் இத்தகவலை வெளியிட்டு, அமைச்சரை பாராட்டி வருகின்றனர்.
விமானங்களிலும், விமான நிலையங்களிலும், ஊழியர்களிடம் எம்.பி.,க்கள் பிரச்னை செய்த நிலையில், அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, அமைதியாக நடந்து கொண்டதாக சக பயணிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
நன்றி– பத்மா மகன், திருச்சி