விமானத்தில் வெடிகுண்டு… அலற விட்ட மனநலம் பாதித்த பெண்

மும்பை:
கண்ணை கட்ட வைச்சுட்டாங்களே… வைச்சுட்டாங்களே என்று நொந்து போய் உள்ளனர் வெடிகுண்டு நிபுணர்கள். என்ன விஷயம் தெரியுங்களா?

மும்பை விமான நிலையத்தில் பெண் ஒருவர் குறிப்பிட்ட விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக கூறி நம்ப வைத்து வெடிகுண்டு நிபுணர் குழுவை அலைய விட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை விமான நிலையத்தில் கோ ஏர் விமானம் டில்லி புறப்பட காத்திருந்தது. அப்போத் அங்கு விரைந்த பெண் ஒருவர், ஒரு பெண் விமான நிலைய பணியாளரை அணுகி, மும்பையில் இருந்து லக்னோ வழியாக டெல்லி செல்லும் இன்டிகோ 6E 3612 விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

அதோடு மேலும் சில புகைப்படங்களை காட்டி இவர்கள் ஆபத்தானவர்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளார். அவ்வளவுதான் பரபரப்பு பற்றிக் கொண்டுள்ளது. விமான பெண் ஊழியர் உடனே விமான நிலைய போலீசாருக்கு தகவல் கூற விமான நிலையமே அதிர்ச்சியில் ஆழ்ந்து விட்டது.

உடன் அங்கு விரைந்து வந்த இன்டிகோ விமான வெடிகுண்டு நிபுணர் குழுவினர் வெடிகுண்டு சோதனையில் ஈடுபட்டனர். ஆனால், வெடிகுண்டு ஏதும் கிடைக்கவில்லை. இதனால் விமானம் சுமார் 2 மணி நேரத்திற்கு மேல் தாமதமானது.

இதன் பின்னர் வெடிகுண்டு பற்றிய தகவல் தெரிவித்த பெண்ணை அழைத்து விசாரித்த போது அந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்து நொந்து போய் விட்டனர். கண்ணை கட்ட விட்டு விட்டார் அந்த பெண் என்று தலையில் அடித்து கொண்டுள்ளனர் அதிகாரிகள்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!