விமானம் ஒன்று சிரியாவில் காணாமல் போயுள்ளது

ரஷ்யாவின் இராணுவ விமானம் ஒன்று சிரியாவில் சென்றுகொண்டிருந்த நிலையில், காணாமல் போயுள்ளதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் Il-20 ரக விமானம் மத்தியதரைக் கடல் மீது பறந்துகொண்டிருந்தபோது, பணியாளர்களடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

குறித்த விமானம் 14 பேருடன் பயணித்தமை குறிப்பிடத்தக்கது.

Il-20 ரக விமானம் கிட்டத்தட்ட 35 கி.மீ. சிரிய கரையோரப் பகுதியிலிருந்து ரஷ்யாவின் மெய்மிம் விமானத் தளத்திற்கு திரும்பிக்கொண்டிருந்த வேளையில் அது காணாமல் போயுள்ளது.

சிரியாவில் கடந்த 7 வருட காலமாக உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்டு வருகின்ற நிலையில், அந்நாட்டு ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு இணங்க, 2015ஆம் ஆண்டு முதல் ரஷ்யா வான் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.

இந்த உள்நாட்டு யுத்தத்தில் சிக்கி 350,000க்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!