விமானம் தாங்கிய கப்பல் கட்டும் சீனா.!

இந்தியாவின் அரிஹாந்த் கப்பல், அமெரிக்காவின் எம்ஹெச் 60 ரோமியோ விமானம், ரஷ்யாவின் கிரிகோரோவிச் போர் கப்பல் ஆகியவை பலம் பொருந்திய போர் கருவியாக இருக்கின்றது. இந்திய அணு ஆயுதங்கள் இந்தியாவின் ராணுவத்திலும் இணைக்கப்பட்டும், வெளிநாட்டு ஆயுதங்கள் மற்றும் கருவிகள் விரைவில் இணைக்கப்படவும் இருக்கின்றது.

இந்த மூன்று நாடுகளை எதிர்க்கவும், தன்னை மற்ற நாடுகளிடம் ஆயுதம் உள்ள நாடாக காட்டிக் கொள்ளவும் சீனா தற்போது தயாராகின்றது. இதற்காக தற்போது, ஆழ்கடல் பகுதியில் தன்னை பெரிதாக காட்டிக்கொள்வும், விமானம் தாங்கிய கப்பல் கட்டும் பணியில் சீனா ஈடுபட்டு வருகின்றது.

அணு ஆயுதங்கள் முதல் நவீன போர் கப்பல்கள், ஹெலிகாப்படர்கள், நீர்மூழ்கி கப்பல் என்று அனைத்தையும் தன் வசம் வைத்துள்ளது சீனா. மேலும் ராணுவத்தில் அதிக ஆட்களையும் நியமித்துள்ளது. அதில் தொழில் நுட்பங்களையும் முப்படைகளிலும் சீனா பயன்படுத்தி வருகின்றது. மேலும், பாகிஸ்தானிடம் 20 அதிநவீன போர் விமானங்களும், எப்-16எஸ், ஜே ஜே 17 போர் விமானங்களும் அதிகளவில் இருக்கின்றன. மேலும், சீனாவிடம் 1,700 போர் விமானங்களும் இருக்கின்றன. 4ம் தலைமுறைக்கான 800 போர் விமானங்களும் இருக்கின்றன.

ஆழ்கடல் பகுதியில் ஆதிக்கம் செலுத்தி வரும் சீனாவுக்கு எதிராக இந்தியாவின் அரிஹாந்த் நீர்மூழ்க்கி கப்பல் பயன்பாட்டில் இருக்கின்றது. மேலும் அமெரிக்காவிடம் 14 ஆயிரம் கோடியில் 24 எம்ஹெச் 60 ரோமியோ ஹெலிகாப்டர் வாங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த ஹெலிகாப்டர் நீர்மூழ்க்கி கப்பலையும் தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது. பலம்:

கோவா கப்பல்கட்டும் தளத்தில் 2 போர்க்கப்பல்களைக் கட்டுவதற்கான உடன்பாட்டில் இந்தியாவும் ரஷ்யாவும் கையொப்பமிட்டுள்ளன. ரஷ்யாவின் கிரிகோரோவிச் வகைப் போர்க்கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தைப் பெற்றுக் கோவா கப்பல்கட்டும் தளத்தில் அவ்வகைக் கப்பல்களைக் கட்ட இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தை ரஷ்யாவின் ஆயுத ஏற்றுமதி நிறுவனமான ரோசோபோரோன்எக்ஸ்போர்ட் நிறுவனத்திடம் இருந்து பெறுவதற்கான 3565கோடி ரூபாய் மதிப்புள்ள உடன்படிக்கையும் கையெழுத்தாகியுள்ளது.

இதை தொடர்ந்து ரஷ்யாவில் மேலும் இரண்டு கிரிகோரோவிச் கப்பல்களும் ரஷ்யாவிடம் இருந்து வாங்கும் 7131 கோடி ரூபாய் மதிப்பில் ஒப்பந்தமும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவிடம் 24 எம்ஹெச் ரோமியோ 60 ஹெலிகாப்டரையும் வாங்க இந்தியா சார்பில் ஒப்பந்தமும் கோரப்பட்டுள்ளது.

உலக வல்லரசு நாடுகள் பட்டியில் இந்தியாவுக்கும் வளர்ந்து கொண்டு இருக்கின்றது. சீனாவுக்கு இணையாவும் பல்வேறு தீவுகளையும் கப்பல் வணிகத்திலும் இந்தியா ஈடுபட்டு வருகின்றது. ஆழ்கடல் பகுதியில் இந்தியா ரோந்தும் அதிகரித்து இருப்பது சீனாவுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் கையில் இருந்த ஒரு சில தீவுகள் இந்தியாவிடமும் வந்தது விட்டது. வர்த்தகத்தில் போட்டியாக இந்தியா முனைப்போடும் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் அமெரிக்காவின் வர்த்தக கப்பலை தென் சீன கடல் பகுதியில், சீனாவின் கப்பல் மோதுவது போல், சென்றது. இதனால், அமெரிக்காவும் கதிலங்கியது. இரு நாடுகளுக்கும் லேசாக பகை மூண்டது.

இரு நாடுகளும் ஏற்றுமதி இறக்குமதி பொருட்களுக்கு வரிவிதிப்பை அதிகப்படுத்தி உள்ளன. இந்நிலையில் அமெரிக்க விமானம் தாங்கிக் கப்பலான ரொனால்ட் ரீகன் என்ற போர்க்கப்பல் ஹாங்காங் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது சீனாவுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத்தொடர்ந்து, உள் நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட லியோனாங் என்ற விமானம் தாங்கிக் கப்பல் உள்ள நிலையில் மேலும் 3 கப்பல்களைக் கட்டி வரும் பணியை சீனா விரைவு படுத்தியுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது விமானந்தாங்கிக் கப்பல் கட்டும் பணிகள் முடிந்து விட்ட நிலையில் 3 வது விமானந்தாங்கிக் கப்பல் கட்டும் பணிகள் வரும் 2021ம் ஆண்டுக்குள் முடிவடையும் என அந்நாட்டு ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திதாக தயாரிக்கப்படும் கப்பலில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ஜே-15 ரக போர் விமானங்களை பயன்படுத்தி சோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Sharing is caring!