விமான பாதுகாப்பபில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம்

விமான பாதுகாப்பு தொடர்பிலான தரப்படுத்தலில் தெற்காசியாவில் இலங்கை முதலிடம் பெற்றுள்ளது.

சர்வதேச ரீதியில் விமான சேவை அமைப்பு இந்த வருடம் ஜுலை மாதம் 4 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடத்திய ஆய்வின் பின்னர் இந்த தரப்படுத்தல் விபரம் வௌியிடப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆய்வு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவை அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் எச்.எம்.சி. நிமல்சிறி தெரிவித்தார்.

192 நாடுகளை உள்ளடக்கிய வகையில் நடத்தப்பட்ட ஆய்வில் சிவில் விமான போக்குவரத்து அமைப்பு, இலங்கையை தெற்காசியாவில் முதலிடத்தில் தரப்படுத்தியுள்ளமையினால் பல்வேறு நன்மைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Sharing is caring!