விமான விபத்து…சிறுவன் மட்டும் உயிர் பிழைப்பு

இந்தோனேசியாவில் மலைப்பகுதியில் விழுந்த விமானத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்த நிலையில் 12 வயது சிறுவன் மட்டும் உயிர் பிழைத்தது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிழக்கு இந்தோனேசியாவின் மலைப்பகுதியில் சுவிட்ஸர்லந்தில் தயாரிக்கப்பட்ட அந்த பிலாட்டஸ் ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் உயிரிழந்தனர். ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு சென்றவுடன் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கும் விமானத்திற்குள் இடையே உள்ள தொடர்பு துண்டிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்பின் விமான காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். விமானத்தை தேடும் பணியில் இறங்கிய அதிகாரிகள் மலையின் அடிவாரத்தில் விழுந்திருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் விமானத்தில் இருந்த 8 பேர் உயிரிழந்த நிலையில் 1 சிறுவன் மட்டும் உயிர் பிழைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் விழுந்து நொறுங்கியதால் இறந்தவர்களின் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. விமான விபத்துக்குறித்து பாப்புவா ராணுவ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Sharing is caring!