வியட்நாமின் கடவுள் கரங்கள் தாங்கும் பாலம்…குவியும் சுற்றுலா பயணிகள்

வியட்நாமில் கட்டப்பட்டுள்ள Cau Vang அல்லது Golden Bridge எனப்படும் பாலம் அதன் தனித்துவ வடிவமைப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளைக் கவர்ந்து வருகிறது.

வியட்நாமில் கடல் மட்டத்திலிருந்து 3,280 அடி உயரத்தில் அமைந்துள்ள Ba Na மலைப்பிரதேசத்தில் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது.

பாலம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் கடந்திருந்தாலும், தற்போது இந்தப் பாலத்தைத் தாங்கிப் பிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய இரண்டு கரங்கள் காரணமாக மேலும் பிரபலமடைந்துள்ளது.

இந்த இரண்டு கரங்களையும் கடவுளின் கரங்கள் (God’s Hands) என வர்ணிக்கின்றார்கள்.

இரண்டு கைகள் விரிந்து வந்து பாலத்தைத் தாங்கிப் பிடிப்பது போல வடிவமைக்கப்பட்டுள்ளது. இரண்டு கைகளும் அங்கு இருக்கும் மலையில் இருந்து வருவது போல கான்கிரீட்டில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடமாகத் தீவிரமாக கட்டப்பட்டு வந்த இந்த பாலம், கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது.

TA Landscape Architecture நிறுவனத்தைச் சேர்ந்த Vu Viet Anh இதை வடிவமைத்துள்ளார்.

இந்த கோல்டன் பாலம் ஏற்கனவே கட்டப்பட்டது. இதில் இருக்கும் கை பகுதிதான் இப்போது கட்டப்பட்டுள்ளது.

150 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் 1919-ல் கட்டப்பட்டது. பிரெஞ்ச் காலனி ஆதிக்கத்தில் கட்டப்பட்ட பாலம் இது. இந்த பாலம் கட்டப்பட்டபின் அந்த பகுதியில் நிறைய சுற்றுலாப் பயணிகள் குவியத் தொடங்கினர்.

தற்போது அங்கு கைகள் இணைக்கப்பட்டு இருப்பதால் அதிகப் பயணிகள் குவிகிறார்கள். கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு அங்கு பயணிகள் குவிந்து வருகிறார்கள். அதேபோல் இதன் புகைப்படங்களும் உலகம் முழுவதும் பரவலாகப் பகிரப்பட்டு வருகின்றன.

Sharing is caring!