விரட்டி வேலை வாங்கினார்… இப்போ சூட்கேஸ் கொடுத்து பாராட்டினார்

சென்னை:
விரட்டு விரட்டுன்னு வேலை வாங்கிட்டு இப்போ சூட்கேஸ் கொடுத்துள்ளார் அமைச்சர்.

தமிழகம் முழுவதும் எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை நடத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட்டு விழாவை ஓரளவுக்கு நடத்தி முடித்தனர்.

சென்னையில் இவ்விழா கடந்த 30ம் தேதி பிரமாண்டமாக நடந்தது.
சென்னை மாவட்டத்தின் சார்பில் நடத்தப்பட்டதால் சென்னை மாவட்ட அமைச்சர் என்ற முறையில் மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பொறுப்பு வழங்கப்பட்டது.

அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோரை ஒரு மாதமாக விரட்டி விரட்டி வேலை வாங்கி, விழாவை நல்லபடியாக நடத்தி முடித்தார் அமைச்சர் ஜெயக்குமார். இதன் நினைவாக, தமிழக அமைச்சர்கள் 33 பேர், துறை செயலர்கள், மாநகராட்சி அதிகாரிகள் என ஐநூறு பேருக்கு தலா பத்தாயிரம் மதிப்புள்ள சூட்கேஸ் ஒன்றை ஜெயக்குமார் பரிசாக அளித்துள்ளார்.

கடந்த 2 நாட்களாக, சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் வழங்கிய சூட்கேஸ் குறித்துத்தான், அதிகாரிகள் மத்தியில் பேச்சாக இருக்கிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!