விரிவாக்கம்… கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம்… மாஜி முதல்வர் தகவல்

பெங்களூரு:
விரிவாக்கம்… விரிவாக்கம் செய்யப்பட உள்ளது கர்நாடகா அமைச்சரவை என்று முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகா அமைச்சரவை டிச.22-ம் தேதி விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக முன்னாள் முதல்வர் சி்த்தராமையா கூறினார்.
கர்நாடகாவில் காங்., மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதல்வர் குமாரசாமி உள்ளார்.

கடந்த மே மாதம் பேட்டியளித்த குமாரசாமி காங். கட்சிக்கு முக்கியத்துவம் அளி்க்க அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய தயார் என்றார்.

இந்நிலையில் கூட்டணி கட்சிகளின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற சித்தராமையா கூறியதாவது:

அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சட்டசபை கூட்டத்தொடர் கூடுவதற்கு முன்பாக வரும் டிச. 22-ம் தேதி விரிவாக்கப்படுகிறது. இதில் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியில் 2 எம்.எல்.ஏ.க்களும், காங். கட்சியில் 6 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் இடம் பெறுவர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!