விரைவில் மக்களின் கோரிக்கை நிறைவேறப் போகுது… அமைச்சர் தகவல்

கரூர்:
விரைவில்… விரைவில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெரூர்– உன்னியூர் இடையே காவிரி ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் விரைவில் அமைக்கப்படும் என பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தெரிவித்தனர்.

கரூர் ஒன்றியம் நெரூர் வடபாகம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒத்தக்கடை காலனி, ஒத்தக்கடை, நெரூர், பழையூர், சின்னகாளிபாளையம், சின்னகாளிபாளையம் காலனி உட்பட பகுதிகளில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் தலைமையில் பொதுமக்களின் இருப்பிடத்திற்கே சென்று கோரிக்கை மனுக்களை பெற்று ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் பேசுகையில், மக்களை தேடி அரசு என்ற உன்னத நோக்குடன் மக்கள் இருப்பிடம் தேடி சென்று பொதுமக்களின் குறைகள், தேவைகளை மனுக்களாக பெற்று அந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட அலுவலர்கள் உரிய விசாரணை மேற்கொண்டு உடனுக்குடன் தீர்வு காணப்பட்டு வருகிறது.
இப்பகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கையான நெரூர்– உன்னியூர் இடையே காவிரியாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்படும். மேலும் சுற்றுவட்ட சாலை அமைக்கும் பணியும் விரைவில் தொடங்கப்படவுள்ளது என்றனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!