விற்க முயன்ற விலை உயர்ந்த முருகன் சிலை மீட்பு

சென்னை:
விலை உயர்ந்த முருகன் சிலையை மீட்டுள்ளனர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள்.

சென்னையில் ரூ 6 கோடிக்கு விற்பனை செய்ய முயன்ற முருகன் சிலை மீட்கப்பட்டது. ஈக்காட்டு தாங்கல் பகுதியில் விற்பனை செய்ய முயன்ற முருகன்சிலையை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன்மாணிக்க வேல், ஏ.டி.எஸ்.பி., ராஜராம் உள்ளிட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

சிலையை விற்பனை செய்ய முயன்றதாக சிவகுமார், முகேஷ், தேசிக அடிகளார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் அரக்கோணம் அருகே புகழ் பெற்ற கோவிலில் இருந்து சிலை இரண்டு வருடங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டிருக்க கூடும் என கூறப்படுகிறது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!