விலக்கு… விலக்கு… இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு விலக்கு… அமெரிக்கா தகவல்

வாஷிங்டன்:
விலக்கு… விலக்கு இந்தியா உட்பட 8 நாடுகளுக்கு மட்டும் விலக்கு அளித்துள்ளது அமெரிக்கா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களித்தது. ஈரான் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. மேலும் அந்நாட்டிடம் கச்சா எண்ணெய் வாங்கக்கூடாது எனக்கூறியது.

நவ.,4க்கு பிறகு எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இருப்பினும், ஈரானிடம் எண்ணெய் வாங்குவது தொடரும் என இந்தியா கூறியது. இது தொடர்பாக அமெரிக்காவிடம் விளக்கமும் அளித்தது.

இந்நிலையில், ஈரானிடம் எண்ணெய் வாங்கி கொள்ள, இந்திய, ஜப்பான், தென் கொரியா உட்பட 8 நாடுகளுக்கு அமெரிக்கா விலக்கு அளிக்க உள்ளதாகவும், இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் விரைவில் அறிவிப்பார் எனவும் தகவல் வெளியானது.

இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், ஈரானிடம் எண்ணெய் வாங்கி கொள்ள சில நாடுகளுக்கு விலக்கு அளிக்க பரிசீலனை நடந்து வருகிறது.

இதில் அந்தந்த நாட்டின் பிரச்னைகள் கவனத்தில் எடுத்து கொள்ளப்படுகிறது. எங்களின் ஈரான் கொள்கை குறித்து நட்பு நாடுகளுடன் தொடர்ந்து ஆலோசனை நடத்துவோம். ஈரானுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.

இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ கூறுகையில், ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி கொள்ள 8 நாடுகளுக்கு தற்காலிகமாக விலக்கு அளிக்கப்படுகிறது. அந்த நாடுகள் குறித்து வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும். இருப்பினும், அமெரிக்க தடைக்கு பின்னர் குறைந்தளவே கச்சா எண்ணெய் வாஙக அனுமதி வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!