விவசாயிகள் இறந்தால் குடும்பத்திற்கு நிதியுதவி… மேற்கு வங்கம் திட்டம்

கோல்கட்டா:
விவசாயிகள் இறந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்று மேற்கு வங்க முதல்வர் அறிவித்துள்ளார்.

”மேற்கு வங்க மாநிலத்தில், விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பத்துக்கு இழப்பீடாக, 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும்,” என, அம்மாநில முதல்வர், மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில், திரிணமுல் காங்கிரஸ் கட்சி ஆட்சி நடக்கிறது. ‘கிரிஷ் கிரிஷாக் பந்து’ திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு பல்வேறு சலுகைகளை, முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

மேற்கு வங்கத்தில், 72 லட்சம் விவசாய குடும்பங்கள் உள்ளன. அந்த குடும்பங்களை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். விவசாயிகள் இறந்தால், அவர்களது குடும்பங்களுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் வழங்கப்படும். மேலும் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை 1 ஏக்கருக்கு தலா, 2,500 ரூபாய் உதவிதொகை வழங்கவும் முடிவு செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!