விவசாயியை கொன்றவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

சேலம்:
2015ம் ஆண்டு தலைவாசலை அடுத்த தென்குமரை கிராமத்தில் தோட்டத்திற்கு தண்ணீர் விடும் தகராறில் வெங்கடாசலம் என்பவரை மல்லிகேஸ்வரி என்பவரின் குடும்பத்தினர் தாக்கினர். இதில் வெங்கடாசலம் உயிரிழந்தார். அவரது உடலை கிணற்றில் வீசிவிட்டு அவர்கள் தப்பிச்சென்றனர்.

இந்த வழக்கில் வெங்கடாசலத்தை கொலை செய்து சடலத்தை கிணற்றில் வீசிய பெண்கள் உள்ளிட்ட 7 பேருக்கு சேலம் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!