வீட்டிற்குள் சிங்ககுட்டியை வளர்த்த இளைஞருக்கு “காப்பு”

பாரிஸ்:
வீட்டிற்குள் சிங்க குட்டியை வளர்த்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பாரிஸ் நகரின் புறநகர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் சிங்கக்குட்டியை வளர்த்த 30 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

அந்த பெண் சிங்கக்குட்டியை சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டு பத்தாயிரம் பவுண்டிற்கு விற்க முயன்றுள்ளார். பிறந்து ஆறு வாரங்களே ஆன பெண் சிங்கக்குட்டியை அவர் தனது வீட்டில் உள்ள அலமாரியில் ஒளித்து வைத்திருந்தார்.

அந்த சிங்கக்குட்டி அவருக்கு எங்கிருந்து கிடைத்தது என்பது தெரியவில்லை. ஆனால் அதை குறைந்த விலைக்கு வாங்கி மறுபடியும் அதிக விலைக்கு விற்கும் நோக்கில், அது திருடப்பட்டு இருக்கலாம். தற்போது அந்தக் சிங்கக்குட்டி நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது. அதை வனவிலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைத்து விட்டோம். இவ்வாறு போலீசார் தெரிவித்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!