வீட்டுக்காவலில் வையுங்கள்… சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி:
வீட்டுக்காவலில் வையுங்கள்… என்று கோர்ட் உத்தரவிட்டுள்ளது. என்ன விஷயம் தெரியுங்களா?

நக்சல் அமைப்புடன் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்ட 5 பேரையும் வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்ய சதி திட்டம் தீட்டிய கும்பலுடன் தொடர்புடைய, நக்சலைட் அமைப்பைச் சேர்ந்தவ
ராவ், 2 பத்திரிகையாளர் உட்பட 5 பேரை போலீசாரால் கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த கைது விவகாரம் தொடர்பாக மஹாராஷ்டிரா மாநில அரசு மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு விளக்கமளித்துள்ளது. அந்த விளக்கத்தில் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் அளித்த தகவலின்படியே 5 பேரும் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இவர்கள் 5 பேரையும் கைது செய்யப்படும் போது, விதிகளை சரியாக பின்பற்றவில்லை என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இது மனித உரிமைகளை மீறும் செயல் என்று கூறி மஹாராஷ்டிர மாநில அரசுக்கும், அம்மாநில டிஜிபிக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ள மனித உரிமைகள் ஆணையம், 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட 5 பேரையும் உடன் விடுதலை செய்ய வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு 3 நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணை முடிவில், 5 பேரையும் வரும் செப்., 6 வரை வீட்டுக்காவலில் வைக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

இதுகுறித்து பதிலளிக்கும்படி மஹாராஷ்டிரா அரசுக்கு நோட்டீஸ் உத்தரவிட்டு வழக்கை செப்., 6க்கு ஒத்திவைத்தது.

Sharing is caring!