வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவு

நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சந்தன கடத்தல் வீரப்பன் கூட்டாளிகள் 9 பேரையும் விடுதலை செய்து கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாளவாடி அருகே, தொட்டகாஜனூர் பண்ணை தோட்டத்தில், 2000 ஜூலை 30ல், கன்னட நடிகர் ராஜ்குமார் தங்கியிருந்தார். அப்போது சந்தனக்கடத்தல் வீரப்பன், அவனது கூட்டாளிகள், 14 பேர், துப்பாக்கி முனையில் ராஜ்குமாரை கடத்தினர். பிணை கைதியாக வைத்திருந்து, 108 நாட்கள் கழித்து அவர் விடுவிக்கப்பட்டார்.

இதுபற்றி அப்போதைய, வி.ஏ.ஓ., கோபாலன் தந்த புகாரின்படி, தாளாவாடி இன்ஸ்பெக்டர் லட்சுமணசாமி, வீரப்பன் மற்றும் கூட்டாளிகள் மீது வழக்குப்பதிவு செய்தார். வயது முதிர்வால் ராஜ்குமார் இறந்தார்.

 2004ல் தமிழக சிறப்பு அதிரடி படையினர், வீரப்பனை சுட்டு கொன்றனர். இந்த கடத்தல் வழக்கு, கோபி மூன்றாவது கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில், 18 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது. இதில் ஏழு ஆண்டுகளுக்கு முன், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை இதுவரை, 10 நீதிபதிகள் விசாரித்துள்ளனர்; 47 பேர் சாட்சியளித்துள்ளனர்.
வழக்கை விசாரித்த நீதிபதி மணி, குற்றம்சாட்டப்ப 9 பேர் மீது குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத காரணத்தினாலும், சாட்சியங்கள் இல்லாத காரணத்தினாலும், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Sharing is caring!