வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரருக்கு பலத்த காயம்

சுக்மா:
நக்சல் தேடுல் பணியில் ஈடுபட்டபோது வெடிகுண்டு வெடித்து போலீஸ்காரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சல் நடமாட்டம் அதிகம் உள்ள சுக்மா உட்பட ஏழு மாவட்டங்களில் நவம்பர் 12 ல் தேர்தல் நடந்தது.
இரண்டாம் கட்ட தேர்தல் நாளை 20 ல் நடக்க உள்ளது. இந்நிலையில் ரிசர்வ் படை போலீசார் பிஜ்ஜி மற்றும் எலர்மட்கு வனப்பகுதியில் நக்சல் தேடுல் பணியில் ஈடுபட்டனர். சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் போலீஸ்காரருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மேலும் இரு போலீசாருக்கு லேசான காயம் ஏற்பட்டு, அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்பகுதியை போலீசார் சுற்றி வளைத்து தேடுதல் பணியை தீவிரப்படுத்தி உள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!