வெடி வெடிக்கும் நேரம் தமிழக அரசே முடிவு செய்து கொள்ள உத்தரவு

புதுடில்லி:
தமிழக அரசே முடிவு செய்து கொள்ளலாம்… கொள்ளலாம் என்று சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது. எதற்காக தெரியுங்களா?

தமிழகத்தில் தீபாவளி 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்கலாம். வெடிக்கும் நேரத்தை தமிழக அரசு முடிவு செய்யலாம் என சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது.

இந்தாண்டு தீபாவளி பண்டிகை, தமிழகத்தில், நவ., 6ம் தேதியும், வட மாநிலங்களில், 7ம் தேதியும் கொண்டாடப்பட உள்ளது. வழக்கமாக, தீபாவளியின் போது, அதிகளவில் பட்டாசுகள் வெடிக்கப்படும்.

இதனால், காற்று மற்றும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாக புகார் எழுந்தது. சமீபத்தில் இது தொடர்பான மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், காற்று மாசு ஏற்படுவதை தடுக்கும் நோக்கத்தில், ‘தீபாவளி அன்று இரவு, 8- 10 மணி வரை மட்டுமே, பட்டாசு வெடிக்க வேண்டும்’ என, உத்தரவிட்டது.

இந்த உத்தரவு, பட்டாசு தயாரிப்பாளர்கள் மற்றும் தீபாவளியை, பட்டாசு வெடித்து உற்சாகமாக கொண்டாடும் சிறுவர்கள் மத்தியில ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், பட்டாசு வெடிக்கும் நேரத்தை மேலும் இரண்டு மணி நேரம் நீட்டிக்கும்படி, தமிழக அரசு தரப்பில், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த கோர்ட், தமிழகத்தில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். வெடி வெடிக்கும் நேரத்தை தமிழக அரசே முடிவு செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!