வெப்ப சலனத்தால் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு

சென்னை:
வெப்பசலனத்தால் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: வெப்பசலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

மாலை அல்லது இரவில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் விருத்தாசலம், நிலக்கோட்டையில் தலா 2 செ.மீ., வேலூர், வாலாஜா, காஞ்சிபுரத்தில் தலா 1 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!