வெறும் வாய்சவடால் விடுகிறது காங்கிரஸ்… குற்றச்சாட்டு வைக்கும் மத்திய அமைச்சர்
புதுடில்லி:
காங்கிரஸ் வெறும் வாய்சவடால் மட்டுமே விட்டு வருகிறது என்று மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி தன் பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி, தனது பேஸ்புக் பக்கத்தில் கிராமங்களின் வளர்ச்சி குறித்த போஸ்டை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:
கிராமங்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் குறித்த விவகாரங்களில், காங்கிரஸ் கட்சி வெறும் பேச்சு மட்டுமே பேசிவருகிறதே தவிர, சிறு நடவடிக்கைகளையும் அக்கட்சி தலைவர்கள் மேற்கொள்ளவில்லை.
பிரதமர் மோடியின் நடவடிக்கைகளால், கிராமங்கள் நவீன வசதிகளை தொடர்ந்து பெற்று வருகின்றன. இதன்மூலம், மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்வடைய வழிவகைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதற்கென்று இலக்கு நிர்ணயித்து உரிய நடவடிக்கைகளை தொடர்ந்து மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் உலக வங்கியின் பொருளாதார வளர்ச்சியின் அடிப்படையில் சிறந்த நாடுகள் பட்டியலில், இந்தியா, பிரிட்டனை முந்தும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
நன்றி- பத்மா மகன், திருச்சி