வெற்றிகரமாக விண்ணில் பறந்தது ஜிசாட் – 11

சென்னை:
வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது ஜிசாட் -11. இதனால் இஸ்ரோ விஞ்ஞானிகள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

அதிவேக இணைய சேவைக்காக தயாரிக்கப்பட்டுள்ள ஜிசாட்-11 செயற்கை கோள் இன்று விண்ணில் வெற்றிகரமாக ஏவியது இஸ்ரோ.

இந்திய விண்வெளி ஆராய்சி அமைப்பான இஸ்ரோ இந்தியாவில் அதிவேக இணைய சேவைக்காக 40 நவீன டிரான்ஸ்பாண்டுகள் பொருத்தப்பட்ட ஜிசாட்-11 என்ற செயற்கை கோளை வடிவமைத்துள்ளது.

இந்த செயற்கை கோள் கடந்த மே மாதம் விண்ணில் செலுத்த திட்டமிடப் பட்டது. ஆனால் மார்ச் மாதம் ஜிசாட்-6ஏ செயற்கைகோள் செலுத்தப்பட்டதால் ‘ஜிசாட்-11’ செயற்கைகோள் ஏவுவது ஒத்தி வைக்கப்பட்டடது. இந்நிலையில் திட்டமிட்டபடி இன்று பிரான்ஸ் நாட்டில் உள்ள கயானாவில் இருந்து ஜிசாட்-11 செயற்கைகோள் ‘ஏரைன்-5’ என்ற ராக்கெட் மூலம் அதிகாலை 2.07 மணி முதல் 3.23 மணிக்குள் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தியது.

5854 கி.கி. எடைகொண்ட ஜிசாட்-11 இஸ்ரோ தயாரித்துள்ள அடுத்த தலைமுறைக்காக வடிவமைக்கப்பட்டுள்ள மிகவும் அதிக எடைக்கொண்டதாகும்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!