வெற்றி பெற முடியாது… கருத்துக்கணிப்பு அதிர்ச்சி தகவல்

சென்னை:
வெற்றி பெற முடியாது… முடியாது… என்று கருத்துக்கணிப்பில் தெரிய வந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்தபிறகு பெரிய வெற்றிடம் உருவாகியுள்ளது. இதை பிடிக்க பல தமிழக கட்சிகளும், தேசிய கட்சியும் முயற்சித்து வருகிறது. தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அரசியல் களத்தில் இறங்கியுள்ளனர்.

இதில் முந்திக் கொண்டு கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி களப்பணிகளில் இறங்கிவிட்டார். ரஜினி அறிவிப்பு வெளியிட்டார். இன்னும் கட்சி தொடங்கவில்லை. இவர்கள் இருவரும் அரசியலில் சாதிப்பார்களா என்று பிரபல தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு நடத்தி உள்ளது. இதில் 8000க்கும் மேற்ப்பட்ட ஆண்களும், பெண்களும் அளித்த வாக்குகளின் அடிப்படையில் 51 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் ரஜினி, கமல் ஆகியோரால் வெற்றி பெற முடியாது என்றே தெரிவித்துள்ளனர்.

இதனால் இருதரப்பு ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!