வெற்றி… வெற்றி… அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி

பாலசோர்:
அக்னி – 5 ஏவுகணை சோதனை வெற்றி… வெற்றி… என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அணு ஆயுதத்தை ஏந்திச் செல்லத்தக்க, கண்டம் விட்டு கண்டம் பாயும், அக்னி – 5 ஏவுகணை, ஒடிசா மாநிலம் பாலசோர் கடற்கரை அருகே வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது. இந்த ஏவுகணை, 56 அடி நீளம், 7 அடி அகலம் உடையது.

மூன்று நிலைகளாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று, இலக்கை துல்லியமாக தாக்கவல்ல இந்த ஏவுகணை, 1.5 டன் அணு ஆயுதத்தை சுமந்து செல்லக் கூடியது. இது, 5,000 கி.மீ., துாரம் பாய்ந்து சென்று தாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!