வெளிநாடுகளில் பணிபுரிந்த 2 லட்சம் இளைஞர்கள் 2 ஆண்டுகளில் நாடு திரும்பியதாக தகவல்

புதுடில்லி:
பல வெளிநாடுகளில் வேலை பார்த்த 2 லட்சம் இளைஞர்கள் நாடு திரும்பி உள்ளனர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளில் 68 நாடுகளில் இருந்து இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள், பல்வேறு காரணங்களால் நாடு திருப்பினர்.

சவுதி அரேபியாவில் இருந்து மட்டும் 95 ஆயிரம் பேர் நாடு திரும்பியுள்ளனர். வேலை வாய்ப்பு இழந்தது பாஸ்போர்ட் தொலைந்தது உட்பட காரணங்களால், இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். லோக்சபாவில் கேள்வி ஒன்றுக்கு அளித்த பதிலில், வெளியுறவுத் துறை இணை அமைச்சர், வி.கே. சிங், இதை தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!