வெளிநாடு பறக்கிறார் பிரதமர் மோடி… டில்லி வட்டாரங்கள் தகவல்
புதுடில்லி:
மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தென் ஆப்ரிக்கா, ருவாண்டா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளுக்கு, அரசு முறைப் பயணமாக, வரும் 23ம் தேதி புறப்படுகிறார் பிரதமர் மோடி.
இதுகுறித்து, வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியிருப்பதாவது: தென் ஆப்ரிக்காவில் நடக்கும், ‘பிரிக்ஸ்’ உச்சி மாநாட்டில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி, நாளை மறுநாள், டில்லியில் இருந்து புறப்படுகிறார்.பிரிக்ஸ் மாநாட்டில், சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்படுகிறது. மாநாடு முடிந்ததும், ருவாண்டா மற்றும் உகாண்டா நாடுகளுக்கும், பிரதமர் மோடி செல்கிறார்.
உகாண்டா நாட்டின், எண்ட்டேபி நகரில் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில், அந்த நாட்டு அதிபர், யோவேரி முசெவேனி, பிரதமர் மோடிக்கு விருந்து அளிக்கிறார். அதைத் தொடர்ந்து, வரும் 25ல், உகாண்டா பார்லிமென்டில், பிரதமர் மோடி உரையாற்றுகிறார். இவ்வாறு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்றி- பத்மா மகன், திருச்சி